செய்யுள் 23: அடியைக் குறியாது அறியாமையினால்

அடியைக் குறியாது அறியாமையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ வடிவிக்ரம வேல் மகிபா குறமின் கொடியைப் புணரும் குணபூதரனே. பொருள்: அழகிய வேலை உடையவனே , மின்னல் கொடி போன்ற குறமகளைச் சேர்பவனே, முருகா ! அறியாமையினால் நான் உன் பாதங்களைத்…

செய்யுள் 22 காளைக் குமரேசன் எனக் கருதித்

காளைக் குமரேசன் எனக் கருதித் தாளைப் பணியத் தவம் எய்தியவா பாளைக்குழல் வள்ளிபதம் பணியும் வேளைச் சுரபூபதி மேருவையே. பொருள் : கமுகின் பாளை போன்ற கூந்தலை உடைய வள்ளியின் பதம் பணியும் மேரு மலையைப் போன்ற பெருமை வாய்ந்த ,…

செய்யுள் 21 கருதா மறவா நெறிகாண

கருதா மறவா நெறிகாண எனக்கு இருதாள் வனசந்தர என்றிசைவாய் வரதா முருகா மயில் வாகனனே விரதா சுரசூர விபாடனனே பொருள் : நினைவு, மறவாமை என்ற நிலையில் நான் நிலைத்திருக்க உன் இரண்டு திருவடிகளில் எனக்கு சரணாகதியை என்று தருவாய், எல்லோருக்கும்…

செய்யுள் 20 அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன்

அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதா உபதேசம் உணர்த்தியவா விரிதாரண விக்ரம வேளிமையோர் புரிதாரக நாக புரந்தரனே. பொருள் : மிகவும் அரிதான மெய்ப்பொருள் எனப்படும் பரம்பொருள் தத்துவத்தின் விளக்கத்தையும் , வேதத்தின் மகா வாக்கியங்களின் அத்வைத சித்தாந்தங்களின் விளக்கத்தையும் எனக்கு உபதேசமாக…

செய்யுள் 19 வடிவும் தனமும் மனமும்

வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோகியவா அடியந்தமிலா அயில்வேல் அரசே மிடியென்று ஒருபாவி வெளிப்படினே. விளக்கம் : ஆதி அந்தமில்லா அரசே முருக பெருமானே, சிவபெருமான் தந்த வஜ்ர வேலை கையில் வைத்திருப்பவரே, அறியாமை என்னும் வறுமை ஆகிய…

செய்யுள் 18 உதியா மரியா உணரா

உதியா மரியா உணரா மறவா விதிமால் அறியா விமலன் புதல்வா அதிகா அநகா அபயா அமரா வதிகாவல சூர பயங்கரனே. விளக்கம் : பிறப்பு - இறப்பு இல்லாதவரும் , உணரவோ மறக்கவோ முடியாதவரும் பிரமானாலும் பெருமாளும் அறிய முடியாத பரிசுத்தமான…

செய்யுள் 17 யாமோதிய கல்வியும் எம்மறிவும்

யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமேபெற வேலவர் தந்ததனால் பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர் நாமேல் நடவீர் நடவீர் இனியே. விளக்கம் : நாம் கற்ற கல்வி, அறிவு எல்லாமே வேலவன் தந்த கொடை, அதனால் இந்த பூவுலகின் மீதுள்ள மையல் போய்,…

செய்யுள் 16 பேராசை எனும் பிணியில்

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ வீரா முதுசூர்பட வேல் எறியும் சூரா சுரலோக துரந்தரனே. விளக்கம் : ஆசை எனும் நோயில் நான் கட்டுண்டு மீண்டும் மீண்டும் பிறக்கின்றேனே, இந்த பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து,…

செய்யுள் 15 முருகன் குமரன் குகன்

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய் பொருபுங்கவரும் புவியும் பரவும் குருபுங்கவ எண்குண பஞ்சரனே. விளக்கம் : முருகா!, குமரா! குஹா! என்று நான் என்று கண்களில் நீர் மல்க உன் மந்திரங்களை கூற…

செய்யுள் 14 கைவாய் கதிர்வேல் முருகன்

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய் மெய்வாய்விழி நாசியொடும் செவியாம் ஐவாய்வழி செல்லும் அவாவினையே. பொருள்: கைகளிலே வேல் தாங்கிய முருகபெருமானின், கழல் அணிந்த பாதங்களைப் பற்றி, மனமே நீ ஒழியவாய், நீ ஒழிந்தால் தான் ஆன்மா…