சாகாது எனையே சரணங்களிலே
காகா நமனார் கலகம் செயுநாள்
வாகா முருகா மயில் வாகனனே
யோகா சிவஞான உபதேசிகனே.
பொருள் : முருகா வெற்றி வாகை மலர்களை சூடியவனே , மயில் மீது வருவோனே, யோக ஞானம் அருள்பவனே, சிவஞான உபதேசம் செய்வோனே, நீ என்னை எமன் வந்து உயிர் பறிக்கும் நாள் அன்று சாகாது காக்க வேண்டும், அதற்காக நான் உன் திருவடிகளில் சரணாகதி அடைகின்றேன்.
முந்தையப் பாடல்களில் சாதகன் வேலாயுதம் தியானத்தினால் குண்டலினி சக்தியை மணிபூரகம் முதல் சகஸ்ராரம் வரை ஏற்றி சமாதி நிலையை அடைகிறான், இப்படி அடைந்தாலும் இந்த அனுபவம் ஆனது கர்ம வினைகள் முழுதையும் தாண்டி ஒரு அனுபவம் அன்று. இந்த சமாதி நிலையானது சாதகனின் தியானத்தினால் இறைவனின் அருளினால் குருவின் கிருபையாலும் இந்தப் பிறவியில் அவனுக்கு வாய்க்கப் பெற்றது, ஆனால் இதனால் பிறவி சுழற்சியிலிருந்து விடுபட்டு விடலாம் என்று நினைக்க முடியாது, ஏனென்றால் சஹஸ்ராரம் வரை செல்லும் குண்டலினி சக்தியானது சாதகனுக்கு ஆத்மா அனுபவத்தைத் தரும் என்றாலும் அது நெடும் பயணத்தின் பாதியை மட்டுமே குறிக்கிறது, சஹஸ்ராரம் தாண்டியும் பரவெளியில் ஒளிமயமான சிவ சொரூபத்தில் கலந்து அதற்கு மேலும் சென்று வெளிச்சத்தையும் தாண்டி மகா சூனியம் என்று சொல்லப்படும் எந்த நிலையிலும் எந்த இயக்கமும் எப்பொழுதும் எதனோடும் ஒட்டாத பரப்பிரம்ம நிலையை அடைந்தால் மட்டுமே சாதகன் அகப்பட்டவன் பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுபட முடியும் இந்த இந்த அனுபவம் கிட்டத்தட்ட ஒரு இறப்பு நிலைதான் ஆனால் இந்த நிலைக்கு சென்று திரும்பவும் உடலுக்குள் வந்தவர்கள் ஜீவன் முக்தர்கள் ஆக மாறி விடுகிறார்கள், இவ்வாறான சாதகர்கள் தான் இறக்கும் பொழுது அதாவது இந்த உடலை விட்டு ஆன்மா நீங்கும் பொழுது மீண்டும் பிறவா நிலையை எய்தி எப்பொழுதும் இறை நிலையிலேயே நிலைத்து விடுகிறார்கள், மற்றவர்கள் சஹஸ்ராரம் தாண்டாமல் ஆத்மா அனுபவத்திலேயே நிலைத்துவிட்டு இதுவே இறை நிலை என்று நினைத்துவிட்டு மாயையின் பிடியில் மாட்டி தாம் முக்தி பெற்றதாக நினைத்துக்கொண்டு அந்த நிலையிலேயே ஏமாந்து விடுகிறார்கள் அல்லது அவர்களிடம் கர்மவினை பராசக்தியின் ஒப்புதல் இல்லாததினால் மீண்டும் பிறப்பு இறப்பு சுழற்சியில் மாட்டிக்கொள்கிறார்கள், அந்தத் திரையை விலக்கி சஹஸ்ராரம் தாண்டி சாதனை வெளிச்சமாக இருக்கும் பரமேஸ்வரனிடம் அழைத்துச் சென்று அதன் பின்பும் மகா சூனியம் வரை இட்டுச் சென்று அந்த இடத்தில் சிவசக்தி கலப்பினால் சாதனை முக்தி அடையச் செய்கிறாள் அப்பொழுதுதான் இந்த ஜீவன் முக்தன் என்று சொல்லப்படும் நிலை எழுகிறது, இந்த மகா சூனியத்தின் நிலையை அறிவதே சிவஞானம் என்று சாத்திரங்களில் கூறப்படுகிறது, இந்த சிவஞானம் இதைத்தான் அருணகிரிநாதர் இந்த பாடலில் சிவஞான உபதேசம் தேசிகனே என்ற ஒரு ஒற்றை வரியில் அவர் கூறுகிறார் சிவ ஞான உபதேசம் கிடைத்தால் மட்டுமே சாதகன் எமன் பிடியில் மாட்டி திரும்பவும் இந்த உலகத்திற்கு வரத்தேவையில்லை.
யார் ஒருவர் எமன் பிடியில் சிக்கி உயர் விட்டு மேலுலகம் செல்கிறாரோ அல்லது வேறு ஒரு நிலைக்கு செல்கிறாரோ அவர் மாத்திரமே திரும்பவும் பிறப்பு இறப்பு என்கிற சுழற்சியில் வந்து மாட்ட முடியும், ஆனால் ஜீவன் முக்தர்கள் ஆக்கப்பட்டவர்கள் உங்களுடைய இறுதி நிமிடங்களில் அல்லது இறுதி நாட்களில் அவர்கள் பரவெளியில் கலைப்பதற்காக சமாதி நிலையில் தங்களை தாங்களே தங்களை இறுதி கொள்கிறார்கள் இவர்கள் எமன் அவர்களுடைய ஆன்மாவை கொள்ளுவதற்காக வருவதில்லை அதனால் இவர்களுக்கு பிறப்போ இறப்போ என்றும் இருப்பதில்லை இவர்கள் நினைத்தால் வேண்டும் பொழுது திறக்கவும் முடியும் சென்று விடவும் முடியும் சில நேரங்களில் இப்படியான ஜீவன்முக்தர் களை பராசக்தியானவள் மற்றைய ஆன்மாக்களை கிடைத்த ஏற்றுவதற்காக மீண்டும் பிறக்கச் செய்கிறார் இவர்கள் தங்களுடைய அளவற்ற கருணையினால் பராசக்தி நினைக்கவும் பிறந்து சில ஆன்மாக்களை தேர்ந்தெடுத்து சில நேரங்களில் இந்த ஆன்மாக்களை தாங்கள் பிறக்கும் முன்பே தேர்ந்தெடுத்துவிட்டு பிறந்து ஒரு குருவாக அமர்ந்து தாங்கள் எவ்வாறு இறைவனை அடைந்த அந்த மார்க்கத்தை இந்த ஆன்மாக்களுக்கு காட்டி பராசக்தியிடம் சேர்த்து அதன் மூலம் சிவ ஞான உபதேசத்தை கொடுத்து அந்த ஆண் மக்களையும் ஜீவன் முக்தர்கள் ஆக மாற்றுகிறார்கள்.
இந்த ஜீவன் முக்தி நிலையே சாகா நிலை என்று கூறப்படுகிறது இந்த நிலையைத்தான் அருணகிரிநாதர் இந்த பாடலில் சாகாது எனையே சரணங்களிலே என்ற வரியில் குறிப்பிடுகிறார், இந்த நிலையில் இருப்பவர்களை எமன் துன்ப படுத்துவதில்லை இவ்வாறான நிலையை எமக்கும் தருவாயாக என்று முருகப் பெருமானது திருவடிகளில் விழுந்து சரணாகதி செய்யும் நிலையையே அக்கா என்று இரண்டு முறை காப்பாற்று காப்பாற்று என்பதை குறிக்கும் வண்ணம் இந்தப் பாடலிலே பயன்படுத்துகிறார், இங்கு முதல் அல்லது காப்பாற்றும் என்பது இங்கு இப்பொழுதே என்பதையும் இரண்டாவது முறை காப்பாற்று என்பது எமன் கழகம் செய்யும் நாளானது அல்லது தாம் இந்த உடலை விட்டுச் செல்லும் தருணத்தையும் குறிக்கிறது, இந்தப் பதம் வாழும் பொழுது தம்மை மீண்டும் பிரபஞ்ச சேற்றில் மாட்டாமல் காப்பாற்றும் என்பதையும் தாம் இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது மீண்டும் இப்பிரபஞ்ச சேற்றில் அனுப்பி விடாதே என்று இறைஞ்சும் ஒரு கோரிக்கையையும் குறிக்கிறது, சுருக்கமாக அருணகிரிநாதர் முருகனிடம் எனக்கு இங்கே இப்பொழுதே முக்தியை அருள்வாயாக என்று கேட்கும் வண்ணம் இந்த பாடல் அமைந்துள்ளது.
லலிதா சஹஸ்ரநாமத்தில் காளஹந்த்ரீ என்ற நாமமும் மிருத்யு மதனீ என்ற நாமமும் காலசம்ஹாரத்தை குறிக்கிறது எங்கு காலன் என்று குறிப்பிடப்படுவது எமனை அல்ல எமனின் வேலையான உயிரைப் பறித்து மீண்டும் பிறக்க செய்வதை குறிக்கிறது இந்த செயலை அழிப்பதன் மூலம் லலிதை தம்முடைய பக்தர்களுக்கு முக்தியை கொடுக்கிறாள் என்று சகஸ்ரநாமம் கூறுகிறது.
அதேபோல் இந்த முக்கிய அகப்பட்டது இவ்வாறு கொடுக்கிறார் என்று பார்த்தால் சஹஸ்ரநாமம் சிவஞான ப்ரதாயினி என்று நாம் அதன் மூலம் லலிதை நாம் இந்த பாடலில் பார்த்தவாறு எவ்வாறு முருகன் சிவன் ஞான உபதேசம் செய்து குருவாக அமர்ந்து முக்தியளிக்கும் அவ்வாறு லலிதாவும் சிவன் ஞான உபதேசம் தங்கி அந்த சாதகனுக்கு சாயுஜ்ய பதவியை அளித்து முக்தியும் அளிக்கிறாள், இந்த இரண்டு ஆன்மீக கிரந்தங்களும் ஒரு சாதகனை எவ்வாறு இறைவன் தம்முடன் சேர்த்துக் கொள்கிறான் அதற்கான மார்க்கங்கள் என்ன என்ன அதை எப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்கிற ஒரு முழுமையான வழிமுறை புத்தகம் போல அமைந்துள்ளது இந்த பாடல்களின் விளக்கத்தினாலும் சஹஸ்ரநாமம் விளக்கத்தினாலும் தெரிகிறது, அதேபோல் முருகப்பெருமானும் அம்பிகையும் வேறுவேறு உருவங்கள் அல்ல அல்லது வேறு வேறு தெய்வங்கள் அல்ல என்பதை நாம் இதுவரை பார்த்து வந்தாலும் இந்தப் பாடலில் மிகவும் தெளிவாக அருணகிரிநாதர் எடுத்து வைக்கிறார்.
இவ்வாறாக லலிதாசகஸ்ரநாமமும் கந்தரனுபூதியும் ஓர் இறைவனை ஒரே மாதிரியான வழியில் சாதகன் சென்று அடைய உதவுகிறது.
