செய்யுள் 48 அறிவொன்று   அறநின்று   அறிவார்   அறிவில்

அறிவொன்று   அறநின்று   அறிவார்   அறிவில்

பிறிவொன்று   அறநின்ற   பிரான்   அலையோ

செறிவொன்று   அறவந்து   இருளே   சிதைய

வெறிவென்றவரோடு உறும்   வேலவனே.

பொருள் : உலக பந்தங்கள் அற்று போய் , அஞ்ஞானம் என்னும் இருள் விலகி,மயக்கத்தை வென்ற ஞானியரோடு இருக்கும் வேலவனே, ஜீவ நிலை அற்று அதன் மேல் நிலையை அறிவார் அறிவில்  நிற்கும் பெருமானே.

இந்த பாடல் கடந்த பாடலின் தொடர்ச்சியாக தான் கொள்ள வேண்டும், 36 தத்துவங்களையும் கடந்து தான் அனுபூதி அல்லது சமாதி நிலையை அடைவதையும் அங்கு நிலைத்து இருப்பதையும் குறிக்கிறது. இந்த ஜீவ நிலையை அறிவு என்றும், இந்த நிலை அற்று போய் அதன் மேல் நிலையை அறிபவர்களின் அறிவில்- சித்தத்தில் எப்போதும் உறைபவர் முருகன் என்றும்  அருளாளர் கூறுகிறார், மகான்கள் இருக்கும் த்யான நிலை எல்லாமே இந்த ஓர் அறிவோடு கலந்து இருக்கும் நிலை தான், இவ்வாறு இருப்பவர்களுக்கு உலக பந்தம் அற்று போவதும், மாயை விலகுவதும் இயல்பாகவே நடக்கிறது.

லலிதையின் நாமங்களில் சைதன்யா அர்க்கிய சமராத்யா என்பது ஞானிகள் அம்பிகையை ஆராதிக்கும் மேற்கூறிய நிலையை தான் குறிக்கிறது.

Leave a comment