செய்யுள் 40 வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்

வினையோட விடுங் கதிர்வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங் கிடவோ சுனையோடு அருவித் துறையோடு பசுந் திணையோடு இதனோடு தெரிந்தவனே பொருள்: நீரூற்று, அருவித் துறை , பசுமையான தினைப் புனம், காவல் பரண் ஆகிய இடங்களில் வள்ளியம்மையோடு திரிந்த முருகா,…

செய்யுள் 39 மாவேழ் சனனம்கெட மாயைவிடா

மாவேழ் சனனம்கெட மாயைவிடா மூவேடணை என்று முடிந்திடுமோ கோவே குறமின்கொடி தோள்புணரும் தேவே சிவசங்கர தேசிகனே. பொருள் : இந்த பிரபஞ்சத்தின் அரசே, மின்னல் கோடி போன்ற குறை மகளின் தோல்களை அனுப்புடன் அணைபவரே, சிவ சங்கர பெருமானின் குருவே! மாவேழ்…

செய்யுள் 38 ஆதாளியை ஒன்றறியேனை

ஆதாளியை ஒன்றறியேனை அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ கூதாள கிராத குலிக்கிறைவா வேதாள கணம் புகழ் வேலவனே. பொருள்: கூதாள மலர்களை மாலையாக அணிந்துள்ள வேடுவ குலத்திற்கு இறைவனே, வேதாள கணங்களால் புகழப் படுபவரே, வேலாயுத பெருமாளே! அறம் என்ற ஒன்றை…

செய்யுள் 37 கிரிவாய்விடு விக்ரம வேல் இறையோன்

கிரிவாய்விடு விக்ரம வேல் இறையோன் பரிவாரம் எனும் பதம் மேவலையே புரிவாய் மனனே பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே. பொருள் : க்ரௌஞ்ச மலையானது பிளந்து அழியுமாறு வேல் விடுத்த இறைவனாகிய முருகனை அடைந்த அடியார் ஒருவர்களுள் ஆகும் நிலை…

செய்யுள் 36 நாதா குமரா நமவென்று அரனார்

நாதா குமரா நமவென்று அரனார் ஓதாய் என ஓதியது எப்பொருள் தான் வேதா முதல் விண்னவர் சூடுமலர்ப் பாதா குறமின் பதசேகரனே. பொருள்: பிரம்மன் மற்றும் ஏனைய தேவர்கள் ஆகியோர்கள் உன் பாதத்தை சிரசில் சூடிக் கொண்டுள்ளனர், அத்தகைய நீ வள்ளியின்…

செய்யுள் 35: விதிகாணும் உடம்பை விடா வினையேன்

விதிகாணும் உடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய் மதிவாணுதல் வள்ளியை அல்லது பின் துதியா விரதா சுரபூபதியே. பொருள்: தேவலோகத்தின் தலைவரே, அழகிய சந்திரனை போன்ற நெற்றி கொண்ட வள்ளி அம்மையை தவிர வேறு யாரையும் துதிக்காத விரதம்…

செய்யுள் 34 சிங்கார மடந்தையர் தீநெறி போய்

சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காமல் எனக்கு வரம் தருவாய் சங்க்ராம சிகாவல ஷண்முகனே கங்கா நதி பால க்ருபாகரனே. பொருள் : மயிலை திறம் பட செலுத்தி போர் புரியும் சண்முக பெருமானே, கங்கை நதியின் புதல்வனே, கருணையும் அருளும்…

செய்யுள் 33 சிந்தாகுல இல்லொடு செல்வமெனும்

சிந்தாகுல இல்லொடு செல்வமெனும் விந்தாடவி என்று விடப்பெறுவேன் மந்தாகினி தந்த வரோதயனே கந்தா முருகா கருணாகரனே. பொருள்: கந்த பெருமானே! முருகா ! கருணையின் உறைவிடமே, கங்கா நதி தந்த வர பிரசாதமே, கங்கை பெற்ற வரத்தால் உதித்தவனே ! விந்திய…

செய்யுள் 32 கலையே பதறிக் கதறித் தலையூடு

கலையே பதறிக் கதறித் தலையூடு அலையே படுமாறு அதுவாய் விடவோ கொலையேபுரி வேடர்குலப் பிடிதோய் மலையே மலைகூறிடு வாகையனே. பொருள்: வன விலங்குகளைக் கொன்று புசிக்கும் வேடர் குலத்தில் வளர்ந்த அழகிய பெண் யானையைப் போன்ற வள்ளியம்மையை மணந்தவரே, கிரவுஞ்ச மலையை…

செய்யுள் 31 பாழ்வாழ்வு எனுமிப் படுமாயையிலே

பாழ்வாழ்வு எனுமிப் படுமாயையிலே வீழ்வாயென என்னை விதித்தனையே தாழ்வானவை செய்தனதாம் உளவோ வாழ்வாய் இனிநீ மயில்வாகனனே. பொருள்: அழிந்துவிடும் மாயையாக இருக்கும் இந்த பாழ்படும் வாழ்க்கையில் என்னை வீழ்த்தி விட்டாயே முருகா, நான் செய்த கீழ்த்தரமான வினைகள் இன்னும் நிறைய உள்ளதோ,…