செய்யுள் 11 கூகாஎன என்கிளை

கூகாஎன என்கிளை கூடி அழப் போகாவகை மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலுகவித் தியாகா சுரலோக சிகாமணியே. பொருள்: நாகாசலம் என்று கூறப்படும் திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் வேலவனே, நான்கு வகை கவி பாடும் திறனை அளிப்பவரே, என் மனைவி மக்கள் சொந்தங்கள்…

செய்யுள் 10 கார்மாமிசை காலன்

கார்மாமிசை காலன் வரில் கலபத்து ஏர்மாமிசை வந்தெதிரப் படுவாய் தார்மார்ப வலாரிதலாரி எனும் சூர்மாமடியத் தொடு வேலவனே. பொருள்: அழகிய மலர் மாலைகளை மார்பின்மீது அணிந்த வேலவா, வலன் என்ற அசுரனை அழித்த இந்திரனுக்கு பகைவனான சூரபத்மன் மாமரமாகி நின்ற போது,…

செய்யுள் 9 மட்டூர்குழல் மங்கையர்

செய்யுள் 9 மட்டூர்குழல் மங்கையர் மையல்வலைப் பட்டூசல்படும் பரிசென்று ஒழிவேன் தட்டூறவேல் சயிலத்து எறியும் நிட்டூர நிராகுல நிர்ப்பயனே பொருள்: கிரவுஞ்ச மலையை தகர்த்த கடுமையான வரும், பயமற்றவரும், துன்பம் இல்லாதவரும் ஆன வேலவனே! தேன் கொண்ட மலர்களை அணியும் பெண்களின்…

செய்யுள் 8 அமரும் பதி கேள்

அமரும் பதி கேள் அகமாம் எனுமிப் பிமரங்கெட மெய்ப்பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பெரு தானவ நாசகனே பொருள்: இமவான் என்ற இமயத்தின் அரசனின், மகளான பார்வதியின் குமரனே, அசுரர்களிடம் போரிட்டு அவர்களை நாசம் செய்தவனே, “நான்”,…

செய்யுள் 7 கெடுவாய் மனனே

கெடுவாய் மனனே கதிகேள் கரவாது இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவேதனை தூள்படவே விடுவாய் விடுவாய் வினையாவையுமே. பொருள்: ஓ மனமே நீ ஒழிந்து போவாய், நீ நல்ல கதி சேர்வதற்கு, இவ்வளவு நாட்கள் மறைந்து வைத்த பொருள் எல்லாம்…

செய்யுள் 6 திணியான மனோ சிலை

திணியான மனோ சிலை மீது உனதாள் அணியார் அரவிந்தம் அரும்புமதோ பணியாஎன வள்ளிபதம் பணியும் தணியா அதிமோக தயாபரனே. விளக்கம் : கற்சிலை போன்று இறுகிய மனதில் உன் இரு கால்கள் படாமல், அந்த மனம் மலருமோ(இல்லை இறைவனின் திருவடி ஸ்பரிசம்…

செய்யுள் 5 மகமாயை களைந்திட

மகமாயை களைந்திட வல்லபிரான் முகமாறு மொழிந்தும் ஒழிந்திலனே. அகமாடை மடந்தையர் என்றயரும் ஜகமாயையுள் நின்று தயங்குவதே. பொருள்: மகா மாயையாகிய இந்த உலக வாழ்வின் பற்று, மனம், புத்தி மற்றும் அஹங்காரம் மீது உள்ள பற்று போன்றவற்றை அழிக்க கூடிய ஆறுமுகம்…

செய்யுள் 4 வளைபட்ட கைம் மாதொடு

வளைபட்ட கைம் மாதொடு மக்கள் எனும் தளைபட்டழியத் தகுமோ தகுமோ கிளைபட்டெழு சூருரமும் கிரியும் தொளைபட்டுருவத் தொடு வேலவனே. பொருள்: வேலவா! அன்று சூரனுக்கு எதிரான போரில், அவன் மார்பையும், க்ரௌஞ்ச மலையையும், அசுர சேனைகளையும் அழிக்க வேலை வீசி எறிந்தவனே,…

செய்யுள் 3 வானோ புனல்பார்

வானோ புனல்பார் கனல் மாருதமோ ஞானோ தயமோ நவில் நான் மறையோ யானோ மனமோ எனை ஆண்ட இடம் தானோ பொருளாவது ஷண்முகனே. விளக்கம் ஷண்முக பெருமானே!, மெய்ப்பொருள் ஆவது எது? ஆகாயமா? நீரா? வாழும் பூமியா? காற்றா? இல்லை அறிவின்…

செய்யுள் 2 உல்லாச நிராகுல

ஆன்மீக வாழ்க்கையில் முதல் படியாகிய நாம ஜெபத்தில் ஆரம்பித்து, கடைசியில் இறைவனுடன் ஒரு ஆன்மாவை இணைப்பதே கந்தர் அனுபூதியின் ஐம்பத்தொரு பாடல்களும், முதல் பாடலில் நாம ஜெபத்தை ஒரு சாதகனுக்கு அறிமுகம் செய்த அருணகிரிநாதர் , இரண்டாம் பாடலில் சாதகனுக்கு ஆறு…