English Articles

செய்யுள் 46 எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள் கந்தா கதிர்வேலவனே உமையாள் மைந்தா குமரா மறைநாயகனே. பொருள் : என் தாயும் தந்தையாக இருப்பவன் நீ, என் கவலைகளை தீர்த்து என்னை நீ ஆட்கொள்ள வேண்டும், கந்த பெருமானே,…

செய்யுள் 45 கரவாகிய கல்வியுளார் கடைசென்று

கரவாகிய கல்வியுளார் கடைசென்று இரவாவகை மெப்பொருள் ஈகுவையோ குரவா குமரா குலிசாயுத குஞ்- சரவா சிவயோக தயாபரனே. பொருள்: மிகுந்த கல்வி அறிவு உள்ளவர்கள், அதனை மற்றவர்களுக்கு பயன் படாதவாறு மறைத்து வைத்து, அந்த ஞானம் அடைய விடாது தடுப்பவர்களின் பின்…

செய்யுள் 44 சாடும் தனிவேல் முருகன் சரணம்

சாடும் தனிவேல் முருகன் சரணம் சூடும்படி தந்தது சொல்லுமதோ வீடும் சுரர்மாமுடி வேதமும் வெம் காடும் புனமும் கமழும் கழலே. பொருள் : பகைவர்களை அழிக்கும் வேலை உடைய முருகனின் பாதங்களை தலையில் சூடும்படி வாய்த்த இறையின் கருணையை எவ்வாறு சொல்வது,…

செய்யுள் 43 தூசா மணியும் துகிலும் புனைவாள்

தூசா மணியும் துகிலும் புனைவாள் நேசா முருகா நினது அன்பருளால் ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே. பொருள் : மாசில்லா மணி மற்றும் ஆடைகளையும் அணிபவளான வள்ளியின் உயிர் நேசனே, உனது அன்பு மற்றும் அருளால் ஆசை…

செய்யுள் 42 குறியைக் குறியாது குறித்தறியும்

குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும் செறிவற்று உலகோடு உரை சிந்தையுமற்று அறிவற்று அறியாமையும் அற்றதுவே. பொருள் : தியானத்தின் குறிக்கோளான பர பிரமத்தை தவிர வேறு எந்த ஒரு பொருளையும் நினையாமல் பர பிரமத்தை மட்டுமே நினைந்து பிரம்மத்தை…

செய்யுள் 41 சாகாது எனையே சரணங்களிலே

சாகாது எனையே சரணங்களிலே காகா நமனார் கலகம் செயுநாள் வாகா முருகா மயில் வாகனனே யோகா சிவஞான உபதேசிகனே. பொருள் : முருகா வெற்றி வாகை மலர்களை சூடியவனே , மயில் மீது வருவோனே, யோக ஞானம் அருள்பவனே, சிவஞான உபதேசம்…

செய்யுள் 40 வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்

வினையோட விடுங் கதிர்வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங் கிடவோ சுனையோடு அருவித் துறையோடு பசுந் திணையோடு இதனோடு தெரிந்தவனே பொருள்: நீரூற்று, அருவித் துறை , பசுமையான தினைப் புனம், காவல் பரண் ஆகிய இடங்களில் வள்ளியம்மையோடு திரிந்த முருகா,…

செய்யுள் 39 மாவேழ் சனனம்கெட மாயைவிடா

மாவேழ் சனனம்கெட மாயைவிடா மூவேடணை என்று முடிந்திடுமோ கோவே குறமின்கொடி தோள்புணரும் தேவே சிவசங்கர தேசிகனே. பொருள் : இந்த பிரபஞ்சத்தின் அரசே, மின்னல் கோடி போன்ற குறை மகளின் தோல்களை அனுப்புடன் அணைபவரே, சிவ சங்கர பெருமானின் குருவே! மாவேழ்…

செய்யுள் 38 ஆதாளியை ஒன்றறியேனை

ஆதாளியை ஒன்றறியேனை அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ கூதாள கிராத குலிக்கிறைவா வேதாள கணம் புகழ் வேலவனே. பொருள்: கூதாள மலர்களை மாலையாக அணிந்துள்ள வேடுவ குலத்திற்கு இறைவனே, வேதாள கணங்களால் புகழப் படுபவரே, வேலாயுத பெருமாளே! அறம் என்ற ஒன்றை…