English Articles

செய்யுள் 17 யாமோதிய கல்வியும் எம்மறிவும்

யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமேபெற வேலவர் தந்ததனால் பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர் நாமேல் நடவீர் நடவீர் இனியே. விளக்கம் : நாம் கற்ற கல்வி, அறிவு எல்லாமே வேலவன் தந்த கொடை, அதனால் இந்த பூவுலகின் மீதுள்ள மையல் போய்,…

செய்யுள் 16 பேராசை எனும் பிணியில்

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ வீரா முதுசூர்பட வேல் எறியும் சூரா சுரலோக துரந்தரனே. விளக்கம் : ஆசை எனும் நோயில் நான் கட்டுண்டு மீண்டும் மீண்டும் பிறக்கின்றேனே, இந்த பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து,…

செய்யுள் 15 முருகன் குமரன் குகன்

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய் பொருபுங்கவரும் புவியும் பரவும் குருபுங்கவ எண்குண பஞ்சரனே. விளக்கம் : முருகா!, குமரா! குஹா! என்று நான் என்று கண்களில் நீர் மல்க உன் மந்திரங்களை கூற…

செய்யுள் 14 கைவாய் கதிர்வேல் முருகன்

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய் மெய்வாய்விழி நாசியொடும் செவியாம் ஐவாய்வழி செல்லும் அவாவினையே. பொருள்: கைகளிலே வேல் தாங்கிய முருகபெருமானின், கழல் அணிந்த பாதங்களைப் பற்றி, மனமே நீ ஒழியவாய், நீ ஒழிந்தால் தான் ஆன்மா…

செய்யுள் 13 முருகன் தனிவேல் முனி

முருகன் தனிவேல் முனி நம்குருவென்று அருள்கொண்டு அறியார் அறியுந் தரமோ உருவன்று அருவன்று உளதன்று இலதன்று இருளன்று ஒளியன்று என நின்றதுவே. விளக்கம் : அது ஒரு உருவத்தில் இல்லை, அருவமாகவும் இல்லை, உள்ளது என்றும் சொல்ல முடியாது, இல்லை என்றும்…

செய்யுள் 12 செம்மான் மகளைத் திருடும்

செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருளொன்றும் அறிந்திலனே. விளக்கம் : சிவந்த நிறமுடைய மானின் மகளைத் திருடும் என் பெருமான், முருகன் பிறப்பு இறப்பு அற்றவன். சும்மா இரு…

செய்யுள் 11 கூகாஎன என்கிளை

கூகாஎன என்கிளை கூடி அழப் போகாவகை மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலுகவித் தியாகா சுரலோக சிகாமணியே. பொருள்: நாகாசலம் என்று கூறப்படும் திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் வேலவனே, நான்கு வகை கவி பாடும் திறனை அளிப்பவரே, என் மனைவி மக்கள் சொந்தங்கள்…

செய்யுள் 10 கார்மாமிசை காலன்

கார்மாமிசை காலன் வரில் கலபத்து ஏர்மாமிசை வந்தெதிரப் படுவாய் தார்மார்ப வலாரிதலாரி எனும் சூர்மாமடியத் தொடு வேலவனே. பொருள்: அழகிய மலர் மாலைகளை மார்பின்மீது அணிந்த வேலவா, வலன் என்ற அசுரனை அழித்த இந்திரனுக்கு பகைவனான சூரபத்மன் மாமரமாகி நின்ற போது,…

செய்யுள் 9 மட்டூர்குழல் மங்கையர்

செய்யுள் 9 மட்டூர்குழல் மங்கையர் மையல்வலைப் பட்டூசல்படும் பரிசென்று ஒழிவேன் தட்டூறவேல் சயிலத்து எறியும் நிட்டூர நிராகுல நிர்ப்பயனே பொருள்: கிரவுஞ்ச மலையை தகர்த்த கடுமையான வரும், பயமற்றவரும், துன்பம் இல்லாதவரும் ஆன வேலவனே! தேன் கொண்ட மலர்களை அணியும் பெண்களின்…

செய்யுள் 8 அமரும் பதி கேள்

அமரும் பதி கேள் அகமாம் எனுமிப் பிமரங்கெட மெய்ப்பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பெரு தானவ நாசகனே பொருள்: இமவான் என்ற இமயத்தின் அரசனின், மகளான பார்வதியின் குமரனே, அசுரர்களிடம் போரிட்டு அவர்களை நாசம் செய்தவனே, “நான்”,…